HomeNewsLocal Newsகொழும்பில் இருந்து புறப்பட்ட ரயில் தடம்புரள்வு !

கொழும்பில் இருந்து புறப்பட்ட ரயில் தடம்புரள்வு !

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிபயணித்த உடரட்ட மெனிக்கே ரயில் தலவாகலை வட்டகொடைபகுதியில் தண்டவாளத்தை விட்டு தடம்புரண்டுள்ளதால் குறித்த
பகுதியில் சீர்செய்யும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ரயில்வே கட்டுபாட்டு நிலையம் தெரிவித்துள்ளது

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இந்த ரயில் 04.01.2020.சனிகிழமை 03.30மணியளவில் குறித்த ரயில் தண்டவாளத்தை விட்டு விலகியதாகவும் நேற்றய
தினத்தில் இருந்து இதனை சீர்செய்யும் பணிகள் ரயில்வே உழியர்களை கொண்டு மேற்கொண்டு வருதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

மேலும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் மற்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் ரயில் ஒரு வழியாக இடம் பெற்றுவருவாகவும் இதனால் பயணிகளுக்கு எவ்வித அசம்பாவிதங்களும் இல்லை என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளதோடு இன்றய தினம் குறித்த ரயில்சேவை வழமைக்கு திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்தது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments