HomeNewsபுத்தர் சிலை மாயம்!

புத்தர் சிலை மாயம்!

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இதில் ஒரு பகுதியை பேரூராட்சிக்கு கொடுக்க வேண்டும்.”

மோடி – ஜின்பிங் சந்திப்பு உலக அளவில் மாமல்லபுரத்தின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் பற்றிய தொன்மையான வரலாற்றுப் பதிவுகளும், நிகழ்வுகளும் உலக அளவில் பேசப்பட்டன.

தற்போது சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில், மிக மோசமான நிலையில் மாமல்லபுரம் மாறிவிட்டது. உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியும் கொள்ளையடிப்பதிலேயே பேரூராட்சி குறியாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் கொந்தளிக்கிறார்கள்.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்துப் பேசிய வரலாற்று நிகழ்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இருவரும் மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களைச் சுற்றிப் பார்த்தனர்.

ஆடல், பாடல், விருந்து என மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டது. இதற்காக இந்திய அரசும், தமிழக அரசும் பல கோடிகள் செலவு செய்து மாமல்லபுரத்தை அழகுபடுத்தினார்கள். தொல்லியல் சின்னங்கள் ரசாயன கலவை கொண்டு புதுப்பிக்கப்பட்டன.

தனியார் தங்கும் விடுதிகள், சாலையோரக் கடைகள், சுற்றுச்சுவர்கள் என எல்லாவற்றுக்கும் அரசு செலவில் வண்ணம் தீட்டப்பட்டது.

சாலையோரங்களில் பெரிய பெரிய மரக்கன்றுகளைத் தொட்டிகளோடு வைத்தனர். மோடி – ஜின்பிங் சந்திப்பு முடிந்ததும் அனைத்து மரக்கன்றுகளும் எடுத்துச் செல்லப்பட்டன. மீண்டும் குப்பைகள் அதிகரிக்கத் தொடங்கின.

வாகனங்கள் உள்ளே நுழைவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் தனித்தனியாக வரி வசூல் செய்கின்றனர். அதாவது, பழையபடி தங்கள் வேலையை காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!

இந்த நிலையில், கடந்த நவம்பர் 1-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கிருபாகரன் மாமல்லபுரத்தைப் பாதுகாத்து, மேம்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதினார்.

இதை சூமோட்டோ வழக்காகப் பதிவு செய்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், மாமல்லபுரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

`அலைகடலே.. அடியேனின் வணக்கம்…!’ – மாமல்லபுரம் கடற்கரையில் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கம்

`அலைகடலே.. அடியேனின் வணக்கம்…!’ – மாமல்லபுரம் கடற்கரையில் மோடி எழுதிய கவிதையின் தமிழாக்கம்

“இந்திய தொல்லியல் துறை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாயும் வசூல் செய்கிறது. அந்த நிதி முழுக்க தொல்லியல் துறைக்கே சென்றுவிடுகிறது.

இதில் ஒரு பகுதியை பேரூராட்சிக்கு கொடுக்க வேண்டும். அப்போதுதான் மாமல்லபுரத்தில் சிறப்பான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும்” எனத் தமிழக அரசு சார்பில் நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

“வார நாள்களில் சராசரியாக சுமார் 2000 சுற்றுலாப் பயணிகளும் வார இறுதி நாள்களில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகளும், சிறப்பு விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் 50,000 சுற்றுலாப் பயணிகளும் வருகிறார்கள்.

நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றித் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்துக்கு வெளியே பார்க்கிங் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தார்கள்.

உற்சாகத்தில் தி.மு.க… உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

உற்சாகத்தில் தி.மு.க… உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

இந்த வழக்கு ஒருபுறம் இருக்க மாமல்லபுரத்தில் நடக்கும் முறைகேடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

டோல்கேட் அமைத்து வரி வசூல் செய்யும் வருமானம் எங்கே போகிறது என சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.

பஸ் – ரூ.125, வேன் – ரூ.100, இருசக்கர வாகனங்ளுக்கு ரூ.15 என நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதைவிட இருமடங்கு, மூன்று மடங்கு பணம் கறாராக வசூலிக்கப்படுகிறது. மேலும், பார்க்கிங் என்ற பெயரில் கொள்ளையும் நடைபெறுகிறது.

மோடி-ஜின்பிங் வருகைக்காகக் கடற்கரை கோயில் நுழைவுப் பகுதியில் பெரிய புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்தப் புத்தர் சிலையுடன் இருபக்கமும் யானை சிலைகள் வைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் புத்தர் சிலை முன்பு புகைப்படங்களை எடுத்துவந்தனர். புத்தர் சிலை நிரந்தரமாக அங்கேயே வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்திருந்தார்.

புத்தர் சிலைக்கு 8 லட்சமும், யானை சிலைக்கு தலா 5 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அந்தச் சிலைகளுக்கு உண்டான வாடகையைக் கூட பேரூராட்சி நிர்வாகம் சிற்பிகளுக்கு இதுவரை கொடுக்கவில்லை.

இதனால் புத்தர் சிலையின் உரிமையாளர் சிலையை நேற்று எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், யானை சிலைகளையும் அதன் உரிமையாளர் எடுத்துச்செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் லதாவிடம் பேசினோம், “மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்“ என நமது அழைப்பை துண்டித்துக்கொண்டார். மீண்டும் அவருக்கு போன் செய்தோம். அதே பதில் மட்டுமே வந்தது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments