Home News Local News தெல்லிப்பளையில் காணாமல்போன 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

தெல்லிப்பளையில் காணாமல்போன 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

0
47

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் சிறுவன் ஒருவனின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அதேபகுதியை சேர்ந்த 13 வி.ஜே.வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் திகதியில் இருந்து குறித்த சிறுவனை காணவில்லை என அவரது அம்மம்மாவினால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள பற்றை காட்டில் உள்ள மரத்தில் குறித்த சிறுவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.