உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் தான் ஆனால் அதுவே ஆபத்தாகி விடக்கூடாது. தற்போது அனைவருமே உடலை நன்றாக பிட்டாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால்தானே இன்று திரும்பிய திசையெல்லாம் ஒரே ஜிம்மாக இருக்கின்றது. இன்ஸ்டாக்ராம்மில் போட்டோ போடவேண்டும் என்னும் காரணத்திற்காக உடல் பயிற்சி செய்ய ஆரமிக்கின்றனர். பின்னர் அதுவே அவர்களுக்கு பெரும் பழக்கமாகி விடுகிறது.
- Advertisement -
ஆனால் தற்போது சில நாட்களாக உடல் பயிற்சி செய்ததனால் மார்படைப்பு ஏற்பட்ட சிலரின் மரணம் நம்மை ஆட்கொண்டுள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் எந்த நோயும் ஏற்படாது மேலும் எந்த வித உடல்நலக்குறைபாடும் இன்றி வாழலாம் என்பதற்காகவே அனைவரும் ஜிமிற்கு செல்கின்றனர். ஆனால் உடல் பயிற்சியால் சிலர் மரணமடைந்ததை கேள்விப்படும்போது மீண்டும் அனைத்தின் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது.
- Advertisement -

ஒரு பக்கம் இப்படி இருக்க, மற்றொருவர்களின் பயமானது இன்னும் வேடிக்கையாக உள்ளது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகிய அனைத்தையும் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் உடல்நலனை கண்டுகொள்ளாதவர்களின் கெதி என்ன ஆகும் என்று மற்ற சிலர் அய்யத்தில் இருக்கின்றனர்.
ஒரு ஊடக அறிக்கையின்படி, ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் VC மற்றும் MD டாக்டர் ரமாகாந்த் பாண்டா கூறுகையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமாதங்களில் முப்பது வயதுடைய ஒருவர் அல்லது இருவர் மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேள்வி படுவோம், ஆனால் இப்போது ஒவ்வொரு வாரமும் இது போல ஒரு மரணம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மனிதனின் வாழ்நாள் அளவானது குறைந்துகொண்டே வருகிறது என்கிறார் அவர்.

மேலும் இந்தியாவின் சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பாண்டா ஒரு முறை கூறுகையில், உடல்பயிற்சியால் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு இரண்டுமே நீங்கள் எப்படி உடல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதை பொருத்து தான். தகாத முறையில் சரியான பயிற்சியாளர் இல்லாமல் செய்யும் உடல்பயிற்சியால் இளைஞர்கள் மத்தியில் இன்று மாரடைப்பு மரணம் அதிகரித்து வருகிறது.
எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும். இப்போது அனைவரும் யூடியூபில் எதையோ பார்த்துவிட்டு அது சரியா தவறா என்று கூட தெரியாமல் அதனை பின்பற்றி பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். மிகக் குறைந்த அளவு அல்லது மிக அதிக அளவிலான உடல் பயிற்சி செயல்பாடு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதில் மாரடைப்பு போன்ற நோய்களும் அடங்கும்.

சரியான உடல் பயிற்சி செய்வதை பற்றி மருத்துவ நிபுணர்கள் கூறுவது:
- 5 முதல் 10 நிமிடங்கள் வரை வார்ம்-அப் செய்யவும்
- 20-30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யவும்.
- 5 முதல் 10 நிமிடங்கள் உடலை ரிலாக்ஸ் செய்யவும்.
மக்கள் நமது உடலை கண்காணிக்க வேண்டும். உடல்பயிற்சி செய்வது விட்டால் மட்டும் எந்த தீங்கும் உடலுக்கு ஏற்படாது என்று நினைப்பது தவறு. மார்பின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டாலோ அல்லது மூட்டுகளில் வலி ஏற்பட்டாலோ அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

எந்த ஒரு விஷியத்தையும் அதிகமாக செய்தாலும் அது ஆபத்தில் தான் முடியும். அது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். எனவே எதையும் சரியாக செய்வோம் சரியான அளவில் செய்வோம்.