ஹட்டன் – மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு இடம்பெற்றதாகக் குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாய் உடைந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிந்துள்ளது. இந்த விபத்தினால் உணவகம் பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், சமைத்து வைத்திருந்த உணவுகளும் வீணாகிப் போனதாகத் தெரியவருகிறது.