HomeLife stylehealthபள பள கூந்தல் வேண்டுமா? இதை செய்யுங்கள்!

பள பள கூந்தல் வேண்டுமா? இதை செய்யுங்கள்!

கூந்தல் வளர்ப்பது ஒரு உயிர் வளர்ப்பதற்கு சமம். இதனை எத்தனைப்பேரால் மறுக்க முடியும். சின்னஜிரு வயதில் தலையில் எண்ணையை வைத்து பாட்டி இழுத்து பிண்ணியபோது இருந்த அடர்த்தியும் நீளமும் இப்போது இல்லை. ஆனால் நம்மக்கு தற்போதைய கவலை அதுவல்ல. இருக்கின்ற கொஞ்ச முடியாவது வழு வழுப்பாக அழகாக பள பளவென இருக்கவேண்டும் என்பது தான் தற்போதைய பெண்களின் மனநிலை. 

இதற்காக எண்ணில் அடங்காத அளவு ஷாம்பு வாங்கி பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதன் விளைவு முடி உதிர்வு. ஆயினும் நாம் அதை நிறுத்துவதில்லை. புதிதாக ஒரு விளம்பரம் பார்த்தல் அடுத்த நாள் காலையில் அந்த ஷாம்பூவை வாங்குவது கடை வீதியில் நின்றுகொண்டு இருப்போம். 

நம் கூந்தல் ஏன் இப்படி சொரசொரப்பாக மாறிவிடுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியின் கருமையை தக்கவைத்துக் கொண்டால் முடியை முடிந்தவரை மென்மையாக வைத்துக்கொள்ளலாம். 

மேலும் ஷாம்பு பயன்படுத்தினால் கூட அதனை சரியாக பயன்படுத்தவேண்டும். ஈரப்பதம் உள்ள ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும். ஷாம்பு பயன்படுத்தி முடிந்ததும் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது. ஆனால் அது வேரில் படாததுப்போல் முடியில் தடவி அதை சில வினாடிகளில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

அதுமட்டுமின்றி ஷாம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை, மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான். அதனை விட்டுவிட்டு முடியெங்கும் ஷாம்பூவை தேய்த்து கொண்டிருப்பது முடி உதிர்வை ஏற்படுத்தும். 

பின்னர் குளித்து முடித்து வந்ததும் டிரையர் பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அப்போது டிரையரை அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம். இவை அனைத்துமே நாம் அன்றாடம் செய்யும் சிறு தவறுகள் ஆனால் அது தான் நம் கூந்தலின் போஷாக்கை குறைத்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. மேலும் அதனை சொரசொரப்பாக்குகிறது. இதனால் முடி உடைந்து கொட்டுகிறது. 

நம் கூந்தலை மென்மையாக மிகவும் முக்கியமானது போஷாக்கு. தலையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது. வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் தேய்த்து ஊறவைத்தால் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு, தலையில் ஏற்படும் புண்கள் அனைத்திற்கும் இது தீர்வளிக்கும். மேலும் தலையில் பேன் வளர்வதையும் வேப்பிலை தடுக்கும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசலாம். இதுவும் ஒருவகையான பாதுகாப்பு முறைதான்.

வாகனம் ஓட்டும்போதும், வெயிலில் செல்லும்போதும் தலைமுடியானது மாசடைகிறது. இதுவும் முடி உதிர்விற்கு ஓர் முக்கிய காரணம். வேப்பிலை போட்டு தலை முடியை அலசுவதால் மாசு பிரெச்சனைகளை தவிர்க்கலாம். மேலும் இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகள் குணமாக்கும். 

என்னடா இது மிக சுலபமாக செய்யக்கூடியவையாக உள்ளதே. இதை செய்யாததால் எனது முடி இப்படி வறண்டு காட்சி அளிக்கிறது. இதனாலா என் முடி இப்படி உதிர்ந்து விட்டது என நினைக்கிறீர்களா?ஆம் சரி தான் சிறிய பிழைகள் தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். என் தாயெனும் (தலை முடி) கோவிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியேனு! பீல் செய்து கொண்டு இருக்கீங்களா? பரவாயில்லை போனதெல்லாம் போகட்டும் இனிமேல் கூந்தலை கூடிய சிரத்துடன் பாதுகாப்போம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments