ஆப்பிள்ளை துண்டாக வெட்டி ஒரு பத்து நிமிடம் வைத்துவிட்டால் போதும் அது காவி நிறமாக(brown) மாறிவிடும்.அதற்கு காரணம், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜானே காரணம், ஆம் காற்றிலுள்ள ஆக்சிஜன் காரணமாகும்.ஆப்பிள்ளை துண்டாக வெட்டும்போது ஆப்பிளில் உள்ள திசுக்கள் வெட்டப்படும். காற்றிலுள்ள ஆக்சிஜன் வெட்டப்பட்ட திசுக்களில் தங்கிவிடும்.
- Advertisement -
வெட்டப்பட்ட ஆப்பிளில் குளோரோபிளாஸ்ட்(chloroplast) என்கிற ஒரு திரவம் உள்ளது.
- Advertisement -

இலைகள் பச்சையாக உள்ளது அதற்கு காரணம் குளோரோபிளாஸ்ட் என்கிற ஒரு திரவம் தான் காரணம்.குளோரோபிளாஸ்ட்தில் பாலிபினால் ஒக்ஸிடைஸ் என்சைம் (polyphenol oxidise enzyme) என்கிற ஒரு மூலப்பொருள் உள்ளது.
அது ஆக்சிஜன் உதையுடன் ஆப்பிளில் உள்ள பினொலிக் கம்போங்ஸ்(phenolic compounds- ஆப்பிள் நிறத்திற்கு காரணமானவை) உடன் எதிர்வினையாத்தி(reaction) குயினோன் (quinone) என்கிற புதிய பொருளை உண்டாகும். பின்னர், குயினோன் ஆப்பிளில் உள்ள ப்ரோடீன், அமினோ அமிலம் உடன் எதிர்வினையாற்றி காவிநிறத்தை உண்டாகிறது.

ஆப்பிள் காவி நிறமாக ஆவதை எப்படி தடுப்பது?
சக்கரை அல்லது உப்பு தண்ணீரை, வெட்டப்பட்ட ஆப்பிள் மீது தடவ வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் காவி நிறமாவதை தவிர்க்கலாம்.
பைனாப்பிள் சாற்றை வெட்டப்பட்ட ஆப்பிள் மீது தடவுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் ஆப்பிளை சுடு தண்ணீரில் கழுவுவதன் மூலம் இதை தவிர்க்கலாம் ஆனால் ஆப்பிளின் சாப்பிடும் தன்மை மாறிவிடும். காவி நிறமாக மாறிய ஆப்பிளை சாப்பிடலாம், எந்த விதமான ஆபத்தும் இல்லை.