வெண்பூசணிகாயின் மருத்துவ குணங்கள்

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ் எனப்படும் தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன.

வாரம் இருமுறை அல்லது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் நுரையீரல் சம்பந்த நோய்கள் தீரும்.

பூசணிக்காய் எலும்புகள் பலவீனமாவதை தடுக்க உதவுகிறது. பூசணிக்காயில் மிகுந்திருக்கும் நார்ச்சத்து சீரண உறுப்புகளுக்கு பலத்தை தந்து மலச்சிக்கல் உண்டாகாதவாறு உதவி செய்கிறது.

வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு மருந்தாவதோடு சிறுநீரக மற்றும் நோய்களையும் போக்கும்.

பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும் அதனால் ஏற்படக் கூடிய இதயக் கோளாறுகளையும் தடுக்க வல்லது.

பூசணிக்காய் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை கொல்லக் கூடியது. மூலத்திற்கும் மருந்தாக பயன்படக் கூடியது. சித்த மருத்துவத்தில் வெண் பூசணிப் பூவை மஞ்சள் காமாலை நோயைப் போக்கவும், சீதபேதி மற்றும் இருமலைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *