ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராமல் தடுக்க சாப்பிட வேண்டிய 10 உணவுகள்

பேரீச்சம் பழத்தில் விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன, டேனின்ஸ் என்னும் நோய் எதிர்ப்புப்பொருளானது நோய்த் தொற்று, இரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படக்கூடியது.

விட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண்பார்வைக் கோளாறை நீக்குவதுடன், குடல் ஆரோக்கியம் மற்றும் சரும நலனையும் பாதுகாக்கிறது. இரத்த இழப்பை ஈடுகட்டவும், சிவப்பணுக்களை அதிகரிக்கவும் பேரீச்சம்பழச்சாறு உதவும்.

தினமும் 4 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, அஜீரண பேதி, மலச்சிக்கல், அமீபியா தொந்தரவு போன்ற வயிற்றுக் கோளாறுகள் வராது.

இரவு உணவு உண்டபின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். பேரீச்சம்பழத்தில் சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், மூட்டுவீக்கம் குணமாகும்.

பேரீச்சம்பழத்தை அரைத்து பாலுடன் கலந்து ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும். தினமும் காலை, மாலை நேரங்களில் வெறும் வயிற்றில் நான்கு பேரீச்சம்பழங்களைச் சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் அவதிப்படுபவர்கள் மற்றும் எலும்புத் தேய்மானம் கால்சியம் குறைப்பாடுகள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும்.

குழந்தைகளுக்கு பேரீச்சம்பழத்தை பால் சேர்த்து அரைத்துக் குடிக்கக் கொடுத்து வந்தால் ஊட்டச்சத்து கிடைக்கும்.

முதியோரைத் தாக்கும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற மற்றும் இளைப்பு நோயைக் குணப்படுத்துவதோடு உடம்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பைச் சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு ஞாபக சக்தி அதிகரிக்கும்.

வெறும் கொட்டைகள் நீக்கிய பழத்தினை பால்லோடு சேர்த்து காச்சி தினமும் 3 வேளை குடித்த வந்தால் சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும்.

கால்சியம் சத்து குறைபாடு உள்ளவர்கள் காலை, மாலை என இந்த பேரீச்சம்பழப் பாலை அருந்தி வந்தால் எலும்பு வலுவடையும். ஆட்டுப்பாலுடன் பேரீச்சம் பழத்தைச் சேர்த்து இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாம்பத்யம் மேம்படும்.

பேரீச்சையுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *