இந்த அறிகுறிகள் இருந்தால் சாதாரணமாக இருந்திடாதீங்க !

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. அதோடு இந்த வைரஸ் தொடர்ந்து பல பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரஸிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அல்லும் பகலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் சில பகுதிகளில் இந்த வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மனித சோதனையில் சில தடுப்பூசிகள் உள்ளன.உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சமீபத்தில் மாற்றமடைந்து பிரிட்டனில் பரவ ஆரம்பித்திருப்பது கண்டறியப்பட்டது. அதோடு, அந்த புதிய வகை வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இந்தியாவில் அந்த புதிய வைரஸ் நுழைந்துவிட்டது.

இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனாவின் அறிகுறி பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. இதுவரை காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகளைத் தவிர, கோவிட்-19 இரைப்பை குடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

மேலும் இந்த இரைப்பைக் குடல் பிரச்சனைகள் நீண்ட காலமாக ஒருவரை வேதனைப்படுத்தக்கூடும்.

அறிக்கை ஒன்றில், ஐந்து கொரோனா நோயாளிகளில் ஒருவர் குடட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற இரைப்பை குடல் அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா பொதுவான அறிகுறிகள் : காய்ச்சல் வறட்டு இருமல் தொண்டை வலி மூக்கு ஒழுகல் மூக்கடைப்பு
மார்பு வலி மூச்சுத் திணறல் சோர்வு
மேலும் இரைப்பை குடல் பிரச்சனைகளின் அறிகுறிகள் ஒருவருக்குகொருவர் வேறுபடலாம் என்றாலும், கொரோனா நோயாளிகளில் மிகவும் பரவலாக இருக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எதிர்கொண்ட மிகவும் பொதுவாக செரிமான பிரச்சனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

பசியின்மை கோவிட்-19 மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், உணவுப் பழக்கத்தையும் பாதிக்கும். குறிப்பாக, நீங்கள் சுவை மற்றும் வாசனை இழப்பை அனுபவித்தால், நீங்கள் பசியின்மையையும் அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது. சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, அந்நாட்டில் 80% கோவிட்-19 நோயாளிகள் பசியின்மையை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

குமட்டல்
வுஹானில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, 10% கோவிட்-19 நோயாளிகள் காய்ச்சல் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து குமட்டல் மற்றும் வயிற்றுப் போக்கை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.

அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு
கொரோனா வைரஸிற்கு குடல் நுண்ணுயிரிகளை பாதிக்கும் திறன் உள்ளது. அதனால் தான் அது இரைப்பை குடல் ஆரோக்கியத்தைப் பாதித்து, இரைப்பை குடல் பிரச்சனையை உண்டாக்குகிறது.

ஆய்வு ஒன்றில், 5 இல் 1 கொரோனா நோயாளி வயிற்றுப்போக்கு மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றை அனுபவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் கொரோனா நோயாளிகள், தங்கள் உடலில் இருந்து கொரோனா வைரஸை வடிகட்ட மற்றவர்களை விட அதிக நேரம் எடுப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

என்ன செய்வது?
இம்மாதிரியான அறிகுறிகளை அனுபவிக்கும் போது, முதலில் உடனே மற்றவர்களிடம் இருந்து விலகி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவரைக் குறைக்க, தனி படுக்கை மற்றும் குளியலறை என வீட்டில் உள்ளோரிடம் இருந்து பிரிந்து இருங்கள்.
அதோடு கொரோனாவின் மற்ற அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து, மருத்துவர் பரிந்துரைப்பதை தவறாமல் பின்பற்றுங்கள்.
முக்கியமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் போது, ஒருவர் தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *