மலச்சிக்கல் தீர எளிய இயற்கை வைத்திய முறைகள்

இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக தோன்றியுள்ள மலச்சிக்கல் தீர எளிய இயற்கை வைத்திய முறைகள் பற்றி பார்ப்போம்.

மருத்துவ குறிப்பு 1 :மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

மருத்துவ குறிப்பு 2 :மலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

மருத்துவ குறிப்பு 3 :மலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.

மருத்துவ குறிப்பு 4 :குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.

மருத்துவ குறிப்பு 5 :நார் சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *