Homedevotionalஇந்த ராசிக்காரர்கள் இந்தப் பொருட்களை ஸ்ரீ ராம பிரானுக்கு வைத்து படையல் செய்தால் வாழ்க்கையில் அதிஷ்டம்...

இந்த ராசிக்காரர்கள் இந்தப் பொருட்களை ஸ்ரீ ராம பிரானுக்கு வைத்து படையல் செய்தால் வாழ்க்கையில் அதிஷ்டம் தூக்கி அடிக்குமாம்..!!

எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை கொண்டு ராம பிரானுக்கு படைத்து வணங்கினால் நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் மாதுளை அல்லது லட்டுவை ஸ்ரீராமருக்குப் படைத்து வழிபட்டால், இதுவரை வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் உடனே விலகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று ரசகுலாவை ஸ்ரீராமருக்கு வைத்து படைத்து வணங்கினால், செல்வ வளம் அதிகரிக்கும்.மிதுனம்:மிதுன ராசிக்காரர்கள், ஸ்ரீராம பிரானுக்கு முந்திரி பர்பியைப் படைப்பதுடன், அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மிகவும் நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்கள், தேங்காய் பர்பி அல்லது மேவா பர்பியை ஸ்ரீராமருக்குப் படைத்து வணங்கினால், இதுவரை உங்களின் செயல்களுக்கு தடையாக இருந்த அனைத்தும் நீங்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள், வெல்லத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வழிபட்டால், இனிமேல் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் பேரிக்காய் அல்லது ஏதாவது பச்சை நிற பழங்களை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள், ஆப்பிளை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், ராம பிரானின் முழு அருளையும் பெறலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் எள்ளு உருண்டையை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்துமே அகலும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் கடலை மாவால் ஆன இனிப்பு பலகாரத்தை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால் நல்ல விஷயங்கள் நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் நாவல் பழம் அல்லது கருப்பு திராட்சையை ஸ்ரீராம நவமி அன்று ராமருக்கு படைத்தால், வாழ்வில் ஓரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கும்பம்:
கும்பம் ராசிக்காரர்கள் சப்போட்டா அல்லது சாக்லேட் பர்பியை ஸ்ரீராமருக்கு படைத்து வணங்கினால், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மீனம்:
மீனம் ராசிக்காரர்கள் ஸ்ரீராம நவமி அன்று, ஜிலேபி அல்லது வாழைப்பழத்தை ஸ்ரீராம பிரானுக்குப் படைத்து வணங்கி, பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினால் அவர்களின் வாழ்வில் நல்லதே நடக்கும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments