விஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் தளபதி விஜய்யுடன் ஒரு திரைப்படமாவது பண்ண வேண்டும் என்பது கனவுதான். அதற்காக பல இயக்குனர்கள் கதை எழுதி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போது விஜய்யின் வசூல் விபரங்களும் வேறு கட்டத்திற்குச் சென்றுள்ளதால் அவர் முக்கிய இயக்குனர்களுடன் பணியாற்றினால் அவரது மார்க்கெட்டுக்கு எந்தவித பாதிப்பும் வராது என நினைத்துக் கொண்டிருக்கிறார் போல.

அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய்யின் பார்வை சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கும் இளம் இயக்குனர்களின் மீது இருக்கிறது. அந்த வகையில் கைதி என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்தில் நடித்தார்.

அதற்கடுத்ததாக மகிழ் திருமேனி, சிறுத்தை சிவா என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் தளபதி விஜய்க்கு ஏற்றபடி எதார்த்தமான சூப்பர் ஹிட் கதை ஒன்றை வைத்துள்ளதாக பிரபல இயக்குனர் வசந்தபாலன் டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

என்னதான் விஜய் மாஸ் படங்களில் நடித்தாலும் இந்த மாதிரி யதார்த்தமான படங்களில் நடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு சரியான தேர்வு வசந்தபாலன் தான்.

ஜிவி பிரகாஷை வைத்து ஜெயில் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு விஜய் படத்தை பார்த்துவிட்டு வசந்த பாலனுக்கு வாய்ப்பு கொடுத்து முன்னணி இயக்குனராக வளர்த்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனால் 99% விஜய் வசந்தபாலன் கூட்டணியில் படம் உருவாக வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். தற்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு விஜய் எப்படிப்பட்ட படங்களில் நடித்தாலும் நல்ல வசூல் பெரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரையும் பார்த்து வளர்த்து விடுங்க விஜய் அண்ணா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *