நண்பர்களுடன் தளபதி விஜய் படு ஜாலியாக இருந்து பார்த்திருக்கிறீர்களா? வைரல் படம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், பல கோடி ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். அவரது நடனத்திற்கும், நடிப்புக்கும், காமெடி சென்ஸுக்கும், குரலுக்கும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்கள் தளபதி என அன்போடு அழைக்கப்படும் விஜய், சம்பந்தமான எந்த செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடும். அந்த வகையில் விஜய் தனது இள வயது நண்பர்களுடன் வெளிநாடு ட்ரிப் சென்றிருந்தபோது, எடுத்துக் கொண்ட படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தான் இள வயது நண்பர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி கடந்த 2014-ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டு டூர் சென்றபோது எடுத்த போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்” என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் நடிகர் ஸ்ரீநாத்தும் உள்ளார்.

படத்தின் பின்னணியில் ‘மெக்ஸிகானோ’ என்று எழுதப்பட்டிருப்பதால், இது மெக்ஸிகோவில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அனைவரும் மல்டி கலரில் சால்வையோடு, தலையில் பெரிய தொப்பிகளையும் அணிந்துள்ளனர்.

விஜய் வெறும் சால்வையோடு, முகத்தில் புன்சிரிப்பை சிந்தியவாறு நிற்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், இப்படியான விஜய்யின் ’அன்சீன் படங்களை’ வெளியிடுமாறு சஞ்சீவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *