மீண்டும் விஜய் உடன் இணையும் மெர்சல் தயாரிப்பாளர்…!
விஜய் – தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் இயல்பு நிலை திரும்பிய பின்னர் ஜூன் மாதத்தில் விஜய்யின் பிறந்தநாளன்று திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தை அடுத்து தனது 65-வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு விஜய் கொடுத்திருப்பதாகவும், இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், தமன் இத்திரைப்படத்து இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இத்திரைப்படத்தை அடுத்து மீண்டும் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் விஜய் கரம்கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முரளி ராமசாமி ஒரு பேட்டியில் கூறுகையில், மெர்சல் தோல்விப்படம் அல்ல.
விஜய்யுடன் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. சமீபத்தில் விஜய்யுடன் பேசினேன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு அடுத்ததாக இருவரும் இணையும் படம் பற்றி பேசலாம் எனக் கூறினார்.” என்று பேட்டியளித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸைச் சேர்ந்த ஹேமா ருக்மணி, நாங்கள் விஜய்யை சந்தித்தது சாதாரண சந்திப்பு தான். கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியிருக்கிறார். இதைப்பற்றி இப்போது பேசுவது சீக்கிரமாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.