விஜய்யின் மாஸ்டர் படத்தில் அரசியல் வசனம் இல்லை : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

வழக்கமாக விஜய்யின் சமீபத்திய படங்களில் அரசியல் விஷயங்கள், தோற்போதைய அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெறும். அதில் நீளமான அரசியல் அறிவுரை கூறும் வசனங்களும் இடம்பெறும்.

ஆனால் மாஸ்டர் படத்தில் இதுபோல் எந்த வசனமும் இருக்காது என்கிறார் இயக்குனர் ரத்னகுமார். இவர் இந்த படத்துக்கு வசனம் எழுதி, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘மாஸ்டர் சமூக அக்கறையுள்ள படம். அதே சமயம் இதில் நீளமான அரசியல் வசனங்கள் ஏதும் இருக்காது. படத்தின் காட்சிகள் அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். இது அரசியல் கதை படம் கிடையாது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *