தளபதி விஜய் தான் புரொஃபஸர்.. மணி ஹெய்ஸ்ட் இயக்குநரே சொல்லிட்டாரே..

தளபதி விஜய் தான் புரொஃபஸர் ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ கூறியுள்ளார்.

ஸ்பானிஷ் கேபிள் டிவியில் ஒளிபரப்பான மணி ஹெய்ஸ்ட் தொடரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகம் முழுக்க கொண்டு சேர்த்துள்ளது. சுமார் 70 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இந்த மணி ஹெய்ஸ்டின் இயக்குநரிடம் பிரத்யேக பேட்டியை யூடியூப் சேனல் நடத்தி இருக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ராயல் மின்ட் எனும் பணம் அச்சடிக்கும் வங்கியை கொள்ளை அடிக்க திட்டமிடுகிறார் மாஸ்டர் மைண்ட் கொண்ட புரொஃபஸர். அதற்கான ஒரு டீமையும் உருவாக்குகிறார். அந்த டீமில் இருக்கும் ஒவ்வொருவரின் பெயரும் டோக்கியோ, பெர்லின் என ஊர் பெயர்களாகவே அமைந்திருக்கின்றன.

இதன் 4வது சீசன் கடந்த மாதம் வெளியாகி உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் மணி ஹெய்ஸ்ட் படத்தின் தாக்கம் இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது.

மாஸ்டர் படத்தில், நடிகர் விஜய் காலேஜ் புரொஃபஸராக நடித்துள்ளார். அதே சமயம் எதிரிகளையும் துவம்சம் செய்ய உள்ளார். மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவான ஆடை பட இயக்குநர் பல முறை மணி ஹெய்ஸ்ட் வெப் தொடரையும் மாஸ்டர் படத்தையும் கம்பேர் செய்து டிவீட் போட்டுள்ளார்.

தளபதி தான் புரொஃபஸர் மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரில் ஆல்வரோ மார்ட்டே நடித்துள்ள புரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் பொருத்தமாக இருப்பார் என மணி ஹெய்ஸ்ட் இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த தளபதி ரசிகர்கள் #MoneyHeist என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *