HomeCinemaவிஜய் வசனத்தை பேசி அரங்கை அதிர வைத்த ராதிகா சரத்குமார் - வீடியோ

விஜய் வசனத்தை பேசி அரங்கை அதிர வைத்த ராதிகா சரத்குமார் – வீடியோ

கலர்ஸ் தமிழ் சேனலில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி கோடீஸ்வரி இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழிலும் கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். இதுதொடர்பாக பேசியிருந்த அவர், பெண்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் நான் ஒரு கருவியாக இருக்கப்போவதில் மகிழ்ச்சி என தெரிவித்திருந்தார்.

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பெண்கள் முதல் கட்ட சுற்றுகளில் பங்கேற்றனர். இதில் இறுதிக்கட்ட போட்டியில் விளையாட 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சி இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ராதிகாவைப் பார்த்து நீங்கள் தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தது மிகவும் பிடிக்கும் என்றார். உடனே ராதிகா தெறி பட வசனத்தை பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments