விஜய் 65 – இது யார் பார்த்த வேலை?

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார் விஜய். ஏப்ரலில் படம் ரிலீஸாகும் என கூறப்படும் நிலையில், தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தபடம் பற்றி எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய்யின் 65வது படத்தை ‛இறுதிச்சுற்று’ சுதா, முருகதாஸ் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்ட நிலையில்

இப்போது, ‛டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியவரும், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தை இயக்குபவருமான அஜய் ஞானமுத்து இயக்குவதாக சில நாட்களாக செய்திகள் வந்தன.

இதுப்பற்றி அஜய் ஞானமுத்து டுவிட்டரில், ‛‛இது யார் பார்த்த வேலைன்னு தெரியல, விஜய் 65வது படத்தை நான் இயக்கவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *