ரெய்டுக்கு பின்பும் அச்சமில்லை.. செம தில்லாக நிலைப்பாட்டை சொன்ன விஜய்.. பாஜகவிற்கு எதிராக வாய்ஸ்!

தனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு பின்பும் கூட நடிகர் விஜய் மத்திய அரசின் சிஏஏவிற்கு எதிராக தைரியமாக பேசி இருக்கிறார்.

நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஏஜிஎஸ் குழுமம், பைனான்ஸ் செய்த அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து விஜய் வீட்டில் சோதனை நடந்தது.

இரண்டு நாட்கள் விஜயின் பண்ணை வீட்டில் இந்த சோதனை நடந்தது. ஆனால் நடிகர் விஜய் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. விஜய் வீட்டில் இருந்து துரும்பை கூட வருமானவரித்துறை எடுத்து செல்லவில்லை.

மத்திய பாஜக அரசின் சிஏஏ.- ஐடி ரெய்டு..எல்லாவற்றுக்கும் எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்த நடிகர் விஜய்

என்ன சொன்னார்கள்
நடிகர் விஜய் வீட்டில் பிப்ரவரியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய முக்கிய தகவல் இரண்டு நாட்கள் முன் வெளியானது . அதில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளார். ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களுக்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பத்திற்கு வருமான வரி சரியாக செலுத்தப்பட்டுள்ளது. பிகில் படத்துக்காக ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்துக்காக ரூ.80 கோடியும் நடிகர் விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். இதற்கு சரியாக வரி செலுத்தி உள்ளார், என்று வரித்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

விஜய் என்ன சொன்னார்
இந்த நிலையில் இன்று மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், நம்மை எதிர்ப்பவர்களை சிரிப்போடு எதிர்கொள்ள வேண்டும். அவர்களை நம் சிரிப்பால் சாகடிக்க வேண்டும் மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது, என்றார். சிஏஏ சட்டத்தை எதிர்க்கும் வகையில் விஜய் இப்படி பேசி இருக்கிறார்.

ரெய்டு எப்படி
அதோடு தன்னுடைய வீட்டில் நடந்த ரெய்டு குறித்தும் விஜய் தைரியமாக பேசினார், அதில் என் அப்பா மாதிரி சந்தோசமாக வாழனும் என்று நினைப்பேன். ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேணும்னு கேட்பேன். உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாகவும் இருக்கனும்,என்று குறிப்பிட்டார். அவரின் இந்த அரசியல் பேச்சு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ரெய்டுக்கு பிறகும்
விஜய் தன்னுடைய வீட்டில் நடந்த ரெய்டுக்கு பிறகும் கூட இப்படி தைரியமாக பேசி இருக்கிறார். பொதுவாக விஜய் வீட்டில் ரெய்டு நடந்ததே அவரின் அரசியல் கருத்துக்காக மட்டும்தான். அவரை அரசியல் ரீதியாக நெருக்கவே ரெய்டு என்று நிறைய செய்திகள் வந்தது. ஆனால் ரெய்டு குறித்து கவலைப்படாமல், அதை பற்றி அஞ்சாமல் மிக தைரியமாக அவர் தன்னுடைய சிஏஏ நிலைப்பாட்டை பேசி இருக்கிறார்.

தைரியம்
சிஏஏவை நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் ஆதரிக்கிறார்கள். மத்திய அரசுக்கு ஆதரவாக பல விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் பேசுகிறார்கள். ஆனால் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் விஜய் தைரியமாக தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார். என்னுடைய கருத்து இதுதான், மத்திய அரசுக்கு நான் அஞ்ச மாட்டேன், நான் பேச வேண்டியதை பேசுவேன், என்று விஜய் தைரியமாக பேசி இருக்கிறார்.

அரசியல் நிலைப்பாடு
சிஏஏ கருத்து மூலம் மத்திய அரசை வெளிப்படையாக விஜய் எதிர்த்து உள்ளார். இதற்கு முன்பே டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி என்று பல விஷயங்களை விஜய் வெளிப்படையாக எதிர்த்து உள்ளார். அப்போதே மெர்சல் படத்திற்கும் சர்க்கார் படத்திற்கும் பிரச்சனை வந்தது. ஆனால் அதையே பற்றி துளி கூட கவலைப்படாமல் விஜய் மிகவும் தில்லாக சிஏஏவிற்கு எதிராக இப்போது பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *