HomeCinemaதமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம்...

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?

பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் நேற்று ஜனவரி 11ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இரண்டு படத்திற்குமே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுக்க, படத்திற்கான புக்கிங் படு சூடாக நடக்கிறது.

நேற்று பிரபலங்கள் பலரும் இந்த இரண்டு நடிகர்களின் படங்களையுமே பார்த்துள்ளனர்.
படம் ரிலீஸ் இப்போது அடுத்து என்ன இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் தான் பார்க்க வேண்டும். தற்போது வந்த தகவல்படி அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி, விஜய்யின் வாரிசு ரூ. 22 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களின் வெளிநாட்டு வசூல் விவரத்தை வைத்து பார்த்தால் தான் யார் முதல் நாளில் அதிக வசூல் என தெரியவரும்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments