திரௌபதி படத்தை பற்றி அஜித் இப்படி சொன்னாரா? இயக்குனர் கூறிய உண்மையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தல அஜித் ஒரு நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணம் போல் வாழ்க்கை என்ற சாதாரண வசனத்தை தல ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு சொல்லாக மாற்றி விட்டார்.

அந்த வகையில் அஜீத் வலது கையில் கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பதைப்போல பல உதவிகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சிறந்த படங்களை ஊக்குவிக்க அவர் தவறியதில்லை. சமீபத்தில் வெளிவந்த திரௌபதி படத்தை பற்றி அஜித் கூறியதாக அந்த படத்தின் இயக்குனர் மோகன் சில விசயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ரிச்சர்ட் ரிஷி, கருணாஸ், ஷீலா ஆகியோரின் நடிப்பில் பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் திரௌபதி. படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் திரௌபதி படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு இயக்குனர் மோகன் அளித்த பேட்டியில் தல அஜித் கூறியதைப்போல் திரௌபதி படத்தில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார். அதாவது தல அஜித் ஒரு நல்ல படம் விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்காமல் மக்களையும் நம்பி உள்ளது எனவும், அது மக்களால் அறியப்பட்டு தானாகவே அங்கீகாரம் பெற்றுக் கொள்ளும் எனவும் கூறியதாக தெரிவித்திருந்தார்.

தல அஜித் கூறியதைப்போல் மக்களால் திரௌபதி படம் நல்ல முறையில் பிரபலம் அடைந்துவிட்டதாக இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட தல ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *