சம்பவம் செய்வதற்கு தேதி குறித்த விஜய்.. ரணகளம் ஆகப்போகும் மாஸ்டர் ஆடியோ விழா

வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பிறகு மொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாதான். அங்கு விஜய் என்ன சொல்லப் போகிறார் என்பதை மொத்த மீடியா உலகமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

தளபதி விஜய் முதல்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதால் ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடல் 2 கோடி பார்வையாளர்களைத் தாண்டி வெற்றி நடைபோடுகிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னையில் எந்த கல்லூரியும் அனுமதி அளிக்கக்கூடாது என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்ததால் அனைவரும் தர மறுத்துள்ளனர்.

இதனால் தற்போது சென்னையில் உள்ள லீலா பேலஸ் எனும் நட்சத்திர ஹோட்டலில் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *