பட்டையை கிளப்பும் பழங்கால காருடன் கெத்தாக இருக்கும் விஜய்.. வேற லெவலில் இறங்கி அடிக்கும் மாஸ்டர்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படம் ஆரம்பித்ததிலிருந்தே பலவிதமான எதிர்பார்ப்புக்களை கிளப்பி வருகிறது. இதுவரை தளபதி விஜய் நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என படக்குழு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டது.

அதற்கேற்றாற்போல் தளபதி விஜய்யின் தோற்றமும் மாஸ்டர் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் இளமையாகவும் வித்தியாசமாகவும் இருப்பதால் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதி தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் கத்தி படத்திற்கு பிறகு அனிருத் விஜய்க்கு இசை அமைக்க உள்ளதால் எதிர்பார்ப்புகள் இரட்டிப்பாகியது. சமீபத்தில் அனிருத் இசையில் தளபதி விஜய் குரலில் வெளியான ஒரு குட்டி கதை பாடல் உலகமெங்கும் பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாஸ்டர் படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. அதில் பழங்கால காருடன் மஞ்சள் கலர் சட்டை போட்டு கெத்தாக நிற்கும் விஜய்யின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *