மீண்டும் பாஜகவை தாக்கும் விஜய்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலான ‘ஒரு குட்டி கதை’ பாடலில் ஒளிந்திருக்கும் குறியீடுகள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வெளியானது.

கார்ட்டூன் எப்படி

இந்த பாடலில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 3000+ கார்ட்டூன் இமேஜ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு நிமிட வீடியோவை கார்ட்டூன்கள் மூலம் உருவாக்க 400 இமேஜ்கள் வரை தேவைப்படும். இந்த பாடல் 5.22 நிமிடம் வரை செல்கிறது. இதுபோன்ற பாடலுக்கு ஒவ்வொரு நொடிக்கும் கார்ட்டூன் வரைய பல நாட்கள் உழைக்க வேண்டி இருக்கும். இந்த பாடலின் வீடியோவை மட்டும் குறைந்தது ஒரு மாதம் கொண்டாவது உருவாக்கி இருப்பார்கள்.

கார்ட்டூன் வீடியோ

இது போல வேறு வீடியோ இணையத்தில் படத்திற்காக வெளியானது இல்லை.இந்தியாவில் முதல் லிரிக் வீடியோ இதுதான். இதற்கு பின் கண்டிப்பாக அசுர உழைப்பு இருக்கும். அதேபோல் கோலிவுட்டிலும் இது புதிய விதமான லிரிக் வகை வீடியோவாக மாறியுள்ளது. இதற்கு முன் டியர் சிஎஸ்கே என்று வீடியோவிற்கு சிஎஸ்கே குறித்து fully சேனல் வீடியோ வெளியிட்டது. இதுவும் கார்ட்டூன் மூலம் உருவாக்கப்பட்டது. ஆனால் இது சினிமா பாடல் இல்லை.

விஜய் எப்படி

இந்த படத்தில் விஜய் பல இடங்களில் நீல நிற உடை அணிந்து இருக்கிறார். இவர் கல்லூரிக்கு நீல நிற காரில் செல்கிறார். இதைத்தான் கார்டூனாக வரைந்து இருக்கிறார்கள். அங்கு படிக்கும் மாணவர்கள், ஊழியர்களிடம் அரசியல் பேசுகிறார். இதனால் நீலம் மற்றும் அதை சார்ந்த அரசியல் படமாக மாஸ்டர் இருக்கலாம். அரசியல் தூக்கலாம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது படம்

அதேபோல் இந்த படத்தின் மூன்றாவது போஸ்டரில் விஜய், கருப்பு உடை அணிந்த மாணவர்களுக்கு இடையில் வாயில் விரல் வைக்க சொல்லும் வகையில் நிற்கிறார். இவர் பெரும்பாலும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் ஆசிரியராக இருக்கலாம். அதன் மூலம் புரட்சி செய்யும் நபராக இருக்கலாம். விஜய் சேதுபதி அதை எதிர்க்கும் நபராக படத்தில் வரலாம் என்றும் கூறுகிறார்கள்.

பாடல் எப்படி

இந்த பாடலில் விஜய் டிப்ரஷன், ஸ்டிரெஸ், அழுத்தம், கோபம், பயம் குறித்தும் பேசுகிறார். இதனால் விஜய் பெரும்பாலும் சைக்காலாஜி ஆசிரியராக இருக்கலாம். இல்லையென்றால் வரலாறு அல்லது ஆங்கில ஆசிரியராக கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். சமயத்தில் மோட்டிவேசனல் ஆசிரியராக, பர்சனலாட்டி டெவலபேமெண்ட் சொல்லித்தருபவராக படத்தில் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

வேலைவாய்ப்பு

அதேபோல் இந்த பாடலில் ஒரு இடத்தில் வேலைவாய்ப்பு, மதம், சண்டை, வன்முறை, பண வீக்கம் ஆகியவற்றை குறித்தும் பேசுகிறார் . இது மறைமுகமாக பாஜகவை தாக்கும் வகையில் உள்ளது. இன்னொரு இடத்தில் வெறுப்பை பரப்பும் நபராக இருக்காதீர் என்று காவி உடையில் ஒரு செய்தி துண்டும் இருக்கிறது. இதை கண்டிப்பாக பாஜக எதிர்க்கும். ஏற்கனவே மாஸ்டருக்கு பாஜக இலவசா விளம்பரம் செய்ய தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கடுப்பு

இதெல்லாம் போக பாஜகவை இன்னும் கடுப்பாக்கும் வகையில், படத்தில் விஜய் பெயர் ஜேம்ஸ் துரைராஜ். அதேபோல் படத்தில் விஜய் வேலை பார்க்கும் கல்லூரி பெயர் செயின்ட் ஜெப்ரி கல்லூரி ஆகும். இதனால் கண்டிப்பாக இதை பாஜக எதிர்க்க வாய்ப்புள்ளது. இந்த பாடல் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதால் இந்தியா முழுக்க எல்லோருக்கும் எளிதாக சென்று சேரும்.

ரெக்கார்ட் இப்படி

அதேபோல் இந்த பாடல் கொலைவெறி ரெக்கார்டை பிரேக் செய்யவும், ரவுடி பேபி ரெக்கார்டை இதன் வீடியோ சாங் வெளியானால் முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. சமீபத்தில் எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு கல்டு அரசியல் பாடல், நிறைய தத்துவங்களுடன் வெளியானது இல்லை. இந்த பாடல் விஜய் பிளே லிஸ்டில் பல வருடங்கள் கண்டிப்பாக நீடித்து இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *