“மாஸ்டர்” ஆக இருக்கவே விரும்புறோம்.. அவரை “ஹெட் மாஸ்டர்” ஆக்கிடாதீங்க..

“மாஸ்டர்” ஆக இருக்கவே விரும்புகிறோம்.. தயவுசெய்து அவரை உங்களுக்கு “ஹெட்மாஸ்டர்” ஆக்கி விடாதீர்கள்” என்று போஸ்டர்கள் ஒட்டி மாஸ் கிளப்பி வருவதுடன், அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்! தான் உண்டு, ஷூட்டிங் உண்டு என்று இருந்து விஜய்யை.. ரெய்டு என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்து.. பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்… டெல்லி தந்த அழுத்தம்தான், விஜய்யின் ரெய்டு என ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது!

ரெய்டு என்பது சாதாரண ஒரு நடவடிக்கைதான், அடிப்படை காரணம் இல்லை என்றும் சில தலைவர்கள் கருத்து சொன்னாலும், பல தலைவர்கள் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று, ரஜினியை உயர்த்தி பிடிக்கவே விஜய் மீதான ரெய்டு நடவடிக்கை என்றும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

எதிர்பார்ப்பு
இதையடுத்து, மீண்டும் நெய்வேலியில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்… அங்கிருந்த வேன் மீது ஏறி நின்று கொண்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்… இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் போட்டு, நன்றி நெய்வேலி என்று தெரிவுக்கவும், அவரது அரசியல் எதிர்பார்ப்பு இன்னும் எகிறிவிட்டது.

ரசிகர்கள்
ரெய்டு நடந்து முடிந்து இத்தனை நாள் ஆகியும், உச்சத்துக்கும் கொதித்து போயுள்ளது விஜய் ரசிகர்கள்தான்.. விஜய் என்ன விஜய மல்லையாவா? நித்யானந்தாவா, இப்படியா அவரை நடத்துவது? என்று கேட்டு ஆவேசத்தில் உள்ளனர்.. எல்லாம் முடிந்து விஜய் பட ஷூட்டிங் நடந்தாலும், அவரது ரசிகர்களின் கோபத்தை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.

புதுக்கோட்டை
இதில், புதுக்கோட்டையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ஒரு போஸ்டர் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது.. அதாவது, ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட தலைவர்தான் இந்த போஸ்டரை ஒட்டிஉள்ளார்.. அதுவும் மாவட்டம் முழுவதும் போஸ்டரை ஒட்டியுள்ளார். அதில், “அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தளபதி அவர்கள் என்றும் ரசிகர்களான எங்களுக்கு மாஸ்டர் ஆக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம், தயவுசெய்து அவரை உங்களுக்கு ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்” என்று எழுதி வைத்துள்ளார்.

வார்னிங்
ஏற்கனவே கடுப்பில் உள்ள அரசியல் தலைகள் இந்த போஸ்டரை பார்த்துவிட்டு என்ன செய்ய போகிறார்களோ தெரியவில்லை.. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.. விஜய் ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருகிறார்கள்.. இப்படி அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு விவகாரம் முற்றிவிட்டது.. ஆனால் அன்றே நாம் சொன்னபடி, விஜய்யை பாஜக தேவையில்லாமல் தொட்டிருக்க கூடாது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *