தளபதி 65 இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் இவர்கள் தான் – வித்தியாசமா இருந்தாலும் செம கூட்டணி.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

மேலும் இப்படத்தை இயக்க எக்கச்சக்கமான இயக்குனர்கள் விஜயிடம் கதை கூறி காத்திருப்பதாகவும் கூறி வந்தோம். தற்போது இயக்குனர் யார்? இசையமைப்பாளர் யார்? என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ளது.

இப்படத்தை கனா படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சிவகார்த்திகேயனும் நிகழ்ச்சி ஒன்றில் சூசகமாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி. வி பிரகாஷ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *