இந்த வருடம் ஆஸ்கார் விருதுகளை குவித்த படம்.. அட! அதுவும் விஜய் படத்தின் காப்பியா?

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் கொடுக்கப்பட்டன. இதில் கொரிய படமான பாரசைட் சுமார் நான்கு விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோக்கர் படமும் விருதைப் பெற்றுள்ளது. ஆனால் பாரசைட் படம் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மின்சார கண்ணா படத்தின் அப்பட்டமான காப்பி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது தளபதி ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி விஜய் முதல் முறையாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த திரைப்படம் மின்சார கண்ணா. ரம்பா, குஷ்பு, மோனிகா, மணிவண்ணன், கோவை சரளா ஆகியோர் நடிப்பில் கலகலப்பான திரைப்படமாக உருவாகி பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை ஒரு பணக்கார பையன் தனது காதலிக்காக வேலைக்காரனாக சேர்ந்து ஆண்களை வெறுக்கும் ஒரு பெண்ணின் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதம் வாங்குவதைப் போல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் கூத்து என்னவென்றால் 4 ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் குவித்த பாரசைட் படத்தின் கதையும் இதையே ஒத்துள்ளது தான்.

பாரசைட் படத்தின் கதைக்கரு என்னவென்றால் மிகவும் ஏழையான குடும்பம் ஒன்று போலி ஆவணங்களை தயாரித்து பணக்கார குடும்பம் ஒன்றுடன் சேர்ந்து ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இன்று 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள பாரசைட் படம் தமிழ் சினிமாவின் அடிப்படை கமர்சியல் கதையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து தமிழ் சினிமா உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இருந்தும் சில சில மாற்றங்களை செய்து எடுக்கப்பட்ட பாரசைட் வரை படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மேலும் தளபதி விஜய் ஆஸ்கார் விருதை பெற்றதைப் போல அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *