பாலிவுட்டில் விஜய் ரசிகராக நடிக்கும் பிரபல நடிகை.. எட்டுத்திக்கும் பரவும் தளபதியின் புகழ்

தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் மொத்தமாய் ஒட்டிக் கொண்டவர் மேகா ஆகாஷ். இவரது நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவாதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் தோல்வியை தழுவின.

இருந்தும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் தமிழில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது தீவிர ஆர்வம் கொண்டவர். அச்சாரம் போடும் வகையில் தற்போது சத்தமில்லாமல் ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அந்த படத்தின் டிரெய்லரில், நீ மகேஷ்பாபு ரசிகையா என கேட்க, அதற்கு மேகா ஆகாஷ் நான் தளபதி விஜய் ரசிகை என கூறி பாலிவுட்டிலும் தளபதி விஜய்யின் புகழை பரப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் விஜய்யை பிடிக்கும் என்றால் மற்ற நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைப்பது சிரமமாக இருக்குமே என நிருபர்கள் கேட்டதற்கு, எனக்கு பொய் சொல்லத் தெரியாது என ஒரே போடாக போட்டு தள்ளிவிட்டார் மேகா ஆகாஷ். வெற்றி உண்டாகட்டும் மேகா கண்ணு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *