விஜய் வீட்டருகே ஸ்பெஷல் அரங்கம்!

தளபதி 64 படத்துக்காக விஜய் வீட்டருகே, சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட இருக்கிறது. ‘மாநகரம்’ மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த படத்திலேயே கவனம் பெற்றார். அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார். இதில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து அவர், விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். சிறைச்சாலையில்… இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியிலும் நடந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்தது. அங்குள்ள சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்த, டிசம்பர் 18 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி அங்கு ஷூட்டிங் முடிந்து படக்குழு சென்னைத் திரும்பியுள்ளது.

ஈவிபியில் அரங்கு இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள இவிபி-ஸ்டூடியோவில் படத்துக்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், நடிகர் விஜய், அவரது வீடிருக்கும் கொட்டிவாக்கத்தில் இருந்து பூந்தமல்லிக்கு சென்று வந்தால், அதிக நேரம் செலவாகும் என்று கூறப்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலை இதையடுத்து கிழக்கு கடற்கரைச் சாலை அருகே உள்ள ஸ்டூடியோ ஒன்றில், படத்துக்கான அரங்கம் அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது விஜய்யின் வீட்டின் அருகிலேயே இருப்பதால் இங்கு எளிதாக சென்று வர முடியும். இங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *