பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் சன் டிவியில் ஒளிப்பரபான பிகில் படம் முதலிடம் பிடித்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 துவக்க நிகழ்ச்சி அக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுகிழமை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியனர்.
- Advertisement -
பிக்பாஸ் சீசன் 5 யின் துவக்க நிகழ்ச்சி ஒளிப்பரப்பான அதே நேரத்தில் சன் டிவியில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒளிப்பரப்பானது. இந்த இரண்டிலும் டிஆர்பியில் எது முதலிடம் வரப்போகிறது என ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்த விவரங்கள் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாக பரவி கொண்டிருக்கின்றது. சன் டிவியில் ஒளிப்பரப்பான நடிகர் விஜயின் பிக்ல் திரைப்படம் 13.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 துவக்க நிகழ்ச்சி 8.6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி விஜய் படம் முதலிடம் பிடித்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.