தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் செல்ல பிள்ளையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் கவின். இவர் சரவணன் மீனாட்சி என்ற நாடகத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமடைந்தார்.
- Advertisement -
பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலும் தனது முத்திரையை பதித்தார். தற்போது கூட இவரது நடிப்பில் வெளியான லிப்ட் படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் இவரது நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் இவரிடம் தளபதி விஜய் நடிப்பில் இவரது நண்பரான நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவின் கூறியதாவது,
- Advertisement -
“தன்னை பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக பட குழு தரப்பிலிருந்து அழைத்ததாகவும்,ஆனால் தான் சில படங்களில் நடித்து கொண்டிருந்த காரணத்தினால் தளபதியின் பீஸ்ட் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.” மேலும் அவர் கூறியதாவது,
நெல்சன் என்னுடைய நெருங்கிய நண்பர் அவரது படமான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மால் காட்சி ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும், தானை அந்த படத்தில் உதவி இயக்குனராக கூட பணியாற்ற அழைத்தனர் ஆனால் அந்த வாய்ப்பும் சில சூழ்நிலைகள் காரணமாக கைவிடப்பட்டதாக கவின் அவர்கள் தெரிவித்தார்.