HomeCinemaகருப்பு உடையில் விஜய், வெள்ளை ஜிப்பாவில் ஜெயம் ரவி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

கருப்பு உடையில் விஜய், வெள்ளை ஜிப்பாவில் ஜெயம் ரவி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

விஜய்யின் பிறந்த நாளில் வெளியான பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் போன்றவை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்தவகையில் அடுத்ததாக பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

சமீபகாலமாக விஜய் என்ற பெயர் வந்தாலே சமூக வலைதளம் செம பிஸியாகிவிடுகிறது. சும்மாவே விஜய் ரசிகர்கள் விஜய்யை பற்றிய செய்திகள் வந்தால் இணையத்தை வைரலாக்கி விடுவார்கள். அவரது புகைப்படம் கிடைத்தால் சும்மா விடுவார்களா.

அண்மையில் விஜய் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ஜெயம் ரவி மற்றும் விக்ரம் பிரபு ஆகிய இருவரும் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

மேலும் இந்த மாதம் விஜய்யின் தளபதி66 படத்திற்கான அறிவிப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரபரப்பாகியுள்ளது. அனேகமாக விநாயகர் சதுர்த்திக்கு அந்த அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments