HomeCinemaதளபதி பொங்கல் ; வெளியான வேற லெவல் அப்டேட்

தளபதி பொங்கல் ; வெளியான வேற லெவல் அப்டேட்

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ள முடிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். எனில் யோகி பாபு விடிவி கணேஷ் என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநர் செல்வராகவன், சபீர் மற்றும் சாகோ உள்ளிட்டோர் விஜய்க்கு வில்லனாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் ட்ராக் தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் இன்ட்ரோ சாங்கிற்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைப்பதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தினை பொங்கலுக்கு வெளியிடுவது உறுதி என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் 2022 பொங்கல் தளபதி பொங்கலாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments