HomeCinemaவிஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி… வைரலாகும் புகைப்படம்!!

விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி… வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் PAN இந்தியன் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்காக விஜய்க்கு சம்பளமாக 120 கோடி வரை பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

முன்னதாக, ஆரம்ப காலத்தில் லவ்வர் பாயாக நடித்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ படம் மூலமாக ஒரு மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ரமணா இயக்கியிருந்த இப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதற்கு போட்டியாக வெளியான அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருந்தார் ஜோதிகா.

ஆனால் ஜோதிகாவுக்கு முன் அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவியான நம்ரதா நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஒரு சில காட்சிகளில் நடித்திருந்த அவர் அதன்பின் சில காரணங்களால் படத்திலிருந்து திடீரென விலகினார்.

தற்போது நம்ரதா நடித்த அந்த காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த செய்தியை இணையத்தில் தற்போது கொண்டாடி வருகின்றனர். நம்ரதா 2005 ஆம் ஆண்டு மகேஷ் பாபுவை திருமணம் செய்துகொண்டபின் சினிமாவிலிருந்து விலகினார். அதற்கு முன்னதாக தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments