தளபதி விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு பீஸ்ட் மோடில் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் பெயரையே பீஸ்ட் என வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டனர்.
- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 பட அறிவிப்பு வந்ததில் இருந்தே பலத்த எதிர்பார்ப்பு தான். சமீபகாலமாக இளம் இயக்குனர்களுடன் படம் பண்ணுவதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தான் நெல்சன் உடன் இணைந்தார்.
- Advertisement -
இயக்குனர் நெல்சன் திலிப்குமார் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது கூடுதல் ஸ்பெஷல். நெல்சன் விஜய் டிவியின் தத்து பிள்ளை என கூட சொல்லலாம். தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அனுபவம் வாய்ந்தவர்.
அழகி, பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஒல்லி பெல்லி, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் வரை இயக்கியவர். கோலமாவு கோகிலா வாயிலாக இயக்குனர் ஆனார், அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸுக்கு வைட்டிங்.
இப்படம் என்ன ஜானரில் இருக்கும் என எதிர்பார்த்த பலருக்கு அதிரடியாக துப்பாக்கி தோட்டா என தெறிக்கவிட்டுவிட்டார் இயக்குனர். இந்நிலையில் ட்விட்டரில் சிவகார்த்திகேயன் விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டார். மேலும் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் படம் வருகின்றது என பதிவிட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.
படம் வெற்றி பெறுவதற்கு இந்த டீமுக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு நெல்சன் அண்ணா அந்த 400 (கோடி) வசூல் டார்கெட்டை மறந்துடாதீங்க எனவும் சொல்லியுள்ளார்.