நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘தளபதி 65’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்,இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
- Advertisement -
மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கான காணொளியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.