தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
- Advertisement -
மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.
- Advertisement -
இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.
இந்நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் இதனை உறுதி படுத்தும் வகையில் இயக்குனர் வம்சி பத்திரிகை ஒன்றிற்கு பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது “நான் ‘விஜய்’ படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் விஜய் படம் தயாராகிறது” என கூறியுள்ளார்.