விஜயிடம் பிடித்தது என்ன என்பது குறித்து சூப்பர் ஸ்டார் பேசியவை மீண்டும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
- Advertisement -
விரைவில் படப்பிடிப்பை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் மற்றவர்களின் திறமையை மனமார்ந்த பாராட்டுக்கு உரியவர்.
இவர் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக கருதப்படும் விஜயிடம் மிகவும் பிடித்தது என்ன என்பதை ஓப்பனாக கூறியுள்ளார். விஜயிடம் அவரின் அமைதி பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.