குக்கு வித் கோமாளி அஸ்வினுக்கு விஜய் தரப்பிலிருந்து கிடைத்த உதவி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் அஸ்வின்.
- Advertisement -
இவர் வெள்ளித்திரையில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் புகழ் காமெடியனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் அஸ்வினின் மேனேஜராக தளபதி விஜய் மேனேஜர் இணைந்துள்ளார். பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில் அஸ்வினை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் அஸ்வின் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அஸ்வின் விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பிடிப்பார் என நம்பலாம்.