சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இறந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள மூத்த கலைஞர்கள் முதல் இளம் கலைஞர்கள் வரை அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் வராதது பேசு பொருளானது.
அப்போது விஜய்(vijay) தளபதி 65 படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டிற்குச் சென்றிருந்தார். அதன் காரணமாக விஜய் வராமல் அவரது தாயாரை அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
இந்நிலையில் நேற்று தளபதி 65 படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் இன்று காலை நேரடியாக விவேக் வீட்டிற்கு சென்ற அவரது குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதனை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பரப்பி வந்த நிலையில் அதுவே தற்போது விஜய்க்கு பிரச்சனையாக அமைந்துள்ளது. விஜய் ஜியார்ஜியா நாட்டிலிருந்து திரும்பி வந்த அடுத்த நாளே விவேக் வீட்டிற்கு போனது பிரச்னையாகி உள்ளது.
தற்போது வெளிநாடுகளில் இருந்து வந்த வரும் பயணிகள் அனைவருமே தங்களை தாங்களே குறைந்தது ஒரு வாரமாவது அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற வரையறை உள்ளதாம். ஆனால் விஜய் அதை கடைபிடிக்காமல் அடுத்த நாளே விவேக் வீட்டிற்கு சென்று அவர்களை சந்தித்தது தற்போது தவறான செயல் என்பது போன்ற பிரச்சனை கிளம்பியுள்ளது.
விஜய் வராத போது ஏன் வரவில்லை என சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பினார்கள், இப்போது நேரடியாக வீட்டிற்கு சென்ற போதும் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகின்றனர் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.