3 வருடமாக இருந்த பாகுபலி 2 ரெக்கார்டை பந்தாடிய மாஸ்டர்.. இனி விஜய்தான் நம்பர் ஒன்!

கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய்யின் மார்க்கெட் முன்னரை விட தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னொரு காலத்தில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்தாலே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி வசூல் செய்யும் அளவுக்கு சினிமா வியாபாரம் உயர்ந்துள்ளது.

மேலும் ரசிகர்களும் படத்திற்கு படம் தங்களுடைய நடிகர் படம் வசூலில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை பல முறை பார்க்கவும் தயங்குவதில்லை. இதனாலேயே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வசூல் மலை போல் குவிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படம் விஜய்யின் உண்மையான மார்க்கெட் நிலவரத்தை மற்ற நடிகர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் உணர்த்தியுள்ளது. பலரும் இந்த காலகட்டங்களில் தியேட்டரில் படத்தை வெளியிடத் தயங்கிய நிலையில் விஜய் படத்தை வெளியிட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் சர்வசாதாரணமாக மாஸ்டர் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் தமிழ்நாட்டில் இதுவரை அதிக வசூல் செய்த படங்களில் மூன்று வருடங்களாக முன்னணியில் இருந்த பாகுபலி 2 படத்தின் வசூலை பிகில் படம் முறியடித்தது. ஆனால் பாகுபலி படம் கொடுத்த பங்குத் தொகை சாதனையை முறியடிக்க முடியவில்லை.

ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாகுபலி 2 படத்தின் பங்குத் தொகையை முறியடித்து தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி அதனை தொடர்ந்து அமேசான் தளத்தில் வெளியான பிறகும் கூட தியேட்டரில் குடும்பம் குடும்பமாக மாஸ்டர் படத்தை பார்க்க வந்தது தான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *