தளபதி ‘விஜய்’ நடிக்கும் அடுத்த 2 படங்களின் இயக்குநர்கள் இவர்களா?

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படங்களான தளபதி 66 மற்றும் தளபதி 67 படங்களின் இயக்கநர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் விஜய்யின் 65வது படமாகும்.

இந்த நிலையில்தான் தற்போது விஜய்யின் 66 வது படத்தை லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கமல் நடித்து வரும் விக்ரம் படத்தின் பணிகளை கவனித்து வரும் லோகேஷ், விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இது விஜய்யின் 66 திரைப்படமாக இருக்கும்.

இதேபோல் விஜய் – அட்லி கூட்டணியில் பிகில் படத்தின் வசூல் தமிழகத்தில் அனைத்து சாதனைகளையும் தகர்த்தது. பிகில் படத்தின் போதே ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு அட்லி ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்துக்கான பணிகள் முடிந்த பின் அட்லி மீண்டும் விஜயை இயக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த படம் விஜயின் 67வது படமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *