தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களுக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் வட்டம் உண்டு.

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது 1990 களில் உள்ள நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நடிகர் அஜித் 6 வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆனால் அந்த பட்டியலில் நடிகர் விஜய் இடம் கூட பிடிக்கவில்லை, மேலும் தற்போது நடிகர் விஜய் தான் அதிக சம்பளம் பெரும் நடிகராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.