ஈகோ இல்லாத தளபதி விஜய்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றுள்ள மாஸ்டர் திரைப்படம் மற்ற ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டியாக நடிகர்களாக கருதப்படும் தல அஜித் மற்றும் சூர்யா ஆகிய இருவரைப் பற்றியும் விஜய் தன்னுடைய மாஸ்டர் படத்தில் பயன்படுத்தியது தான் அனைத்து ரசிகர்களையும் விஜய் மீதான மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது.

விஜய் தன்னுடைய மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நேரடியாக தல அஜித்தை நண்பர் அஜித் என்று கூறியது தல அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இருந்தாலும் சில சதிகார ரசிகர்களால் மாஸ்டர் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் மாஸ்டர் படம் பெரிய தோல்வியை சந்தித்ததாக ஒரு செய்தியை பரப்பி விட்டனர்.

இது மாஸ்டர் படக்குழுவை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்திய சினிமாவையே மீட்டெடுக்கும் படமாக வெளியான மாஸ்டரை இப்படி தரக்குறைவாக விமர்சனம் செய்தது அவர்கள் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு கூட பிடிக்காத காரியம் தான்.

ஆனால் விஜய் எப்போதுமே ஈகோ இல்லாத மனிதர் என்பதை அடிக்கடி காட்டிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே புதுமையாகவும் மிகவும் இளமையாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் விஜய்யிடம் ஏன் குடிக்கிறீர்கள் என்று காரணம் கேட்டால் பழைய சினிமா பட காதல் கதைகளை கூறி அனைவரையும் வெறுப்படைய வைப்பார். இந்த காட்சிகள் ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்றுள்ளது.

அதில் ஒரு முறை தல அஜித் நடிப்பில் வெளியான காதல்கோட்டை பட கதையையும் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் காதல் கதையும் கூறி அனைவரையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். விஜய்யின் 28 வருட சினிமா வாழ்க்கையில் முற்றிலும் வித்தியாசமான படமாக உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *