மாஸ்டர் திரைப்படம் வெளியிட்ட தியட்டருக்கு சீல் வைப்பு
இலங்கையில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தை திரையிடட திரையரங்கம் சுகாதார அதிகாரிகளால் சீ ல் வைக்க ப்பட்டுள்ளது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது அதிகளவான பார்வையாளர்களை உள்வாங்கியமை தொடர்பில் இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறிய கு ற்றச்சா ட்டில் திரையரங்கு ஒன்றை சுகாதார பிரிவினர் முட க்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள திரையரங்கே (செல்லா திரையரங்கு ) இவ்வாறு இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.

நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு முழுமையான இருக்கைகளுக்கு பார்வையாளர்களை அனுமதித்து ரிக்கெட்டுக்களை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ரிக்கெட்டுக்களை இணையத்தில் விற்பனை செய்ய அறிவுறுத்தியும் அதனை மீறியமை தொடர்பிலேயே குறித்த திரையரங்கு மூடப்பட்டதாக சுகாதாரத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இங்கு தமிழகம் ,கேரளா போன்று விஜய்க்கு அதிகளவான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.