மாஸ்டர் படத்திற்காக தனது சம்பளத்தை குறைத்து கொண்ட தளபதி விஜய், எவ்வளவு குறைத்துள்ளார் தெரியுமா?
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி வரும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது மாஸ்டர் திரைப்படம்.
இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்காக தனது 25% குறைத்து கொண்டு மீதம் 75% மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளாராம்.
மேலும் கொரோனா மற்றும் 50% இருக்கைகள் காரணமாகவே தளபதி விஜய் இப்படி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.