விஜய்யை சந்தித்த விஜய் சேதுபதியின் அம்மா- தளபதி என்ன செய்தார் தெரியுமா?

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ். தமிழக அரசு திரையரங்கில் 100% மக்கள் அமர்ந்து பார்க்க அனுமதி அளித்தது.

இதனால் தளபதி ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் திடீரென மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என செய்தி வெளியிட்டனர்.

இதனால் தளபதி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார். இந்த நிலையில் தான் மாஸ்டர் பட அனுபவம் குறித்து விஜய் சேதுபதி கொடுத்த பேட்டி உலா வருகிறது.

அதில் அவர், விஜய்யை சந்திக்க என் அம்மா ஆசைப்பட மாஸ்டர் படப்பிடிப்பிற்கு அவரை அழைத்து சென்றேன். தளபதியை சந்தித்து என் அம்மா புகைப்படம் எடுத்தார். பின் அவர் என் மகன் ஒழுங்காக வேலை செய்கிறானா என்று கேட்டார்.

அதற்கு தளபதி, அவங்க மனசு குளிர்ற அளவிற்கு பேசிவிட்டார், நன்றி விஜய் சார் என்றிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *