20 காட்சிகளை வெட்டி எறிந்த சென்சார் அதிகாரிகள்.. மனசாட்சியே இல்லையா எனக் கேட்ட மாஸ்டர் படக்குழு

வருகின்ற பொங்கலுக்கு உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு சென்சார் குழுவினர் யு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆனால் அதில் எத்தனை காட்சிகளை வெட்டி எடுத்தார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாக இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. கிட்டத்தட்ட 20 வெட்டுகள் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

காட்சிகள் மற்றும் வசனங்கள் என மொத்தம் 20 இடங்களில் வெட்டி எறிந்த சென்சார் படக்குழுவினரின் சான்றிதழ் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் சில முக்கிய வசனங்களும் கட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் மாஸ்டர் படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் தான் கொடுப்பேன் என சென்சார் படக்குழுவினர் கூறியதாகவும், பின்னர் அரும்பாடுபட்டு மாஸ்டர் குழு யுஏ சான்றிதழ் வழங்கியதாகவும் அப்போதே செய்திகள் வெளியானது. அந்தளவுக்கு படத்தில் கொடூரமான காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவே விஜய் ரசிகர்களுக்கு படத்தின் மீதான வெறியை அதிகமாகிவிட்டது என்று சொல்லலாம். விஜய் இப்படி ஒரு தர லோக்கலாக இறங்கி படம் நடித்து நீண்ட நாட்களாகி விட்டது.

சுகாதாரத்துறை மீண்டும் கொரானா பற்றிய பீதியை கிளப்பியுள்ளதால் படத்தின் வெளியீட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *