விஜய்யின் மீசை தாடியை எடுக்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் இது தான்..!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
கடந்த வருடமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, வரும் ஜனவரி 13 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அதுமட்டுமின்றி 50% இருக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அரசு அனுமதி உடன் 100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் விஜய்யை புதிய கெட்டப்பில் மாற்ற நினைத்தாராம், அதற்காக விஜய் தனது மீசை தாடியை ஷேவ் செய்தாராம். பின்னர் தளபதி விஜய் லோகேஷிடம் “என்ன சிரிக்கிற, நல்லாத்தானே இருக்கு?” என கூறினாராம்.